சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட மோரூர் கிழக்கு, சின்னாகவுண்டனூர் ஆகிய இரு ஊராட்சிகளில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி சங்ககிரி திமுக ஒன்றிய அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
திமுக சேலம் மேற்கு மாவட்டச் செயலர் பொறுப்பு டி.எம்.செல்வகணபதி இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து சங்ககிரி ஊராட்சி ஒனறியத்திற்குள்பட்ட மோரூர்கிழக்கு, சின்னாகவுண்டனூர் ஆகிய இரு ஊராட்சிகளிலிருந்து பல்வேறு மாற்றுக்கட்சிகளிலிருந்தும் மற்றும் மோரூர் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற சேகரிஈஸ்வரன் உள்பட 70 பேர் திமுகவில் இணைந்தனர். புதிதாக இணைந்தவர்களை அவர் வரவேற்று துண்டுகளை அணிவித்து வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டுமென்றார்.
சங்ககிரி ஒன்றியச் செயலர் பொறுப்பு கே.எம்.ராஜேஷ் முன்னிலை வகித்தார்.
சங்ககிரி முன்னாள் எம்எல்ஏ ஆர்.வரதராஜன், மாவட்ட துணைச் செயலர் சம்பத்குமார், முன்னாள் ஒன்றிய செயலர் பி.தங்கமுத்து, நகரச்செயலர் சுப்பிரமணி, முன்னாள் நகரச் செயலர் முருகன், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் கே.ஜீ.ஆர். ராஜவேலு, செல்வராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.