தமிழ்நாடு

முதுமலையில் உடல்நலம் பாதித்த யானை சாலையை அடிக்கடி மறிப்பதால் வனத்துறை திணறல்

2nd Jan 2021 03:51 PM

ADVERTISEMENT

 

முதுமலை புலிகள் காப்பகத்தில் முதுகில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை வனத்துறையினர் கும்கிகள் உதவியுடன் பிடித்து சிகிச்சையளித்து காட்டிலேயே விட்டுவிட்டனர்.

அந்த ஆண் யானை பொக்காபும் வனத்தை விட்டு வெளியே வந்து மசினகுடி - உதகை சாலையை வழிமறித்து நிற்கிறது. இதனால் வாகனங்கள் சாலையில் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றன. தகவல் கிடைத்தவுடன் வனத்துறை ஊழியர்கள் சென்று காட்டுக்குள் விரட்டுகின்றனர். ஒரு நாளைக்குப் பல முறை சாலையின் குறுக்கே வந்து நிற்பதால் வனத்துறைக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக வன ஊழியர்களை வைத்து யானையைக் கண்காணித்த சிங்கார வனச்சரக அலுவலர் காந்தனிடம் இதுகுறித்து கேட்டபோது, அந்த யானை சிகிச்சையளித்த பிறகு தான் சாலையில் வந்து நிற்கிறது. 

ADVERTISEMENT

மதங்களை யோ சாலையில் செல்லும் வாகனங்களையோ ஒன்றும் செய்வதில்லை. யானை சாலையின் குறுக்கே நிற்பதைக் கண்டால் வனத்துறைக்குத் தகவல் கொடுக்க வேண்டும். யானையிடம் அத்துமீறுவதோ உணவளிப்பதோ தண்டனைக்குரிய செயலாகும். அதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT