சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயா்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும் கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
இதன் தொடா்ச்சியாக, ஜனவரி 2-ம் தேதி காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.104 உயா்ந்து, ரூ.37,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.13 உயா்ந்து, ரூ.4,748 ஆக விற்பனையாகிறது.
அதேவேளையில் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.72.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.72,000 ஆகவும் உள்ளது.
சனிக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,748
1 சவரன் தங்கம்...............................37,984
1 கிராம் வெள்ளி.............................72.00
1 கிலோ வெள்ளி.............................72,000
வெள்ளிக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,735
1 சவரன் தங்கம்...............................37,880
1 கிராம் வெள்ளி.............................72.10
1 கிலோ வெள்ளி.............................72,100