தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் பொது மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
முகாமிற்கு தேவதானப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் கோமதி தலைமை வகித்து,முகாமினை துவக்கி வைத்தார். தாமரைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சிவானந்தம் முன்னிலை வகித்தார். முகாமில் இரத்த பரிசோதனை, ஸ்கேன் மற்றும் பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
நோய்ப் பாதிப்பு கண்டறிந்தவர்களுக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. முகாமில் 250க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு பரிசோதனை செய்தனர்.
முகாமில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், தேவதானப்பட்டி அரசு ஆரம்பச்சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வ.பவானந்தனர். சுகாதார ஆய்வாளர்கள் ஜி.ரெங்கராஜ். கோபி சுப்புராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.