இணையதளம் வாயிலாக உடனடி கடன் வழங்கும் செயலிகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட இரண்டு சீனர் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து சென்னை மாநகர காவல்துறையினர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னை, வேங்கைவாசலை சேர்ந்த கணேசன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வாலிடம் கொடுத்த புகாரில் கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா பாதிப்பு காலகட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லாமல் பணத்தேவைக்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததாகவும் அப்போது சமுகவலைதளங்கள் மூலம் ஆன்லைன் இன்ஸ்டன்ட் லோன் ஆப் மூலம் லோன் வழங்குவதாக விளம்பரத்தை பார்த்து எம் ருபி என்ற ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்ததாகவும் அப்போது தனது விவரங்களையும் பேன்கார்டு, ஆதார்அட்டை, புகைப்படம் ஆகியவற்றை அந்த ஆப் பெற்றுக் கொண்டதாகவும் ரூ.5.000 கடன் வாங்கியதாகவும் அவர்கள் ஒரு வாரத்திற்கு ரு்,1,500 அதிக வட்டியாக பிடித்துக்கொண்டு ரூ,3.500 தனது அக்கௌண்டில் போட்டதாகவும் ஒரு வாரத்தில் ரூ,5,000 கட்ட வேண்டும் என்று நிபந்தனை போட்டதாகவும் அப்படியே கட்டி வந்ததாகவும் தொடர்ந்து இவ்வாறு வட்டி கட்டமுடியாத சூழ்நிலை ஏற்ப்பட்டதாகவும் அதனால் அதே போன்று வேவ்வேறு ஆப்பகளில் கடன் பெற்று செலவுக்கும் வட்டிகட்டவும் பயன்படுத்தி வந்ததாகவும் இவ்வாறு சுமார் 40க்கும் மேற்ப்பட்ட ஆப்புகளில் லோன் பெற்று ஒருகட்டத்தில் அதிக வட்டியோடு லோன் பணத்தை திரும்பக்கட்ட முடியாமல் போய்விட்டதாகவும் ஒரு வாரத்திற்குள் திரும்ப கட்டாததால் ஒரு நாளைக்கு ரூ.100க்கு 2% வட்டி கூட்டிக்கொண்டே போய் அதிகமான தொகை கட்ட வேண்டும் என்று வெவ்வேறு தொலைபேசி எண்களிலிருந்து கெட்ட வார்த்தைகள் பேசியும் வாட்ஸ்ஆப் மூலமாக மெசேஜ் அனுப்பி மிரட்டியதாகவும் எனது கைபேசியில் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் எண்களுக்கு தொடர்பு கொண்டு அசிங்கமாக பேசியதாகவும் அதிக வட்டி வசூலித்து வரும் ஆன்லைன் உடனடி லோன் ஆப் நபர்கள் மீது நடிவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்தார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சீட்டு மற்றும் கந்துவட்டி தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சைபர்கிரைம் பிரிவும் சீட்டு மற்றும் கந்துவட்டி தடுப்பு பிரிவும் இணைந்து புலன் விசாரணை செய்யப்பட்டது.
புலன் விசாரணையில் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட ஆன்லைன் உடனடி லோன் ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளதும் அவற்றில் பெரும்பாலானவை பெங்களுருவில் செயல்பட்டு வருவதும் புகார்தாரரை மிரட்டுவதற்கு பயன்படுத்திய செல்போன் எண்கள் பெங்களுருவில் செயல்பட்டு வருவதும் தெரிய வந்தது.
மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கர்நாடக மாநிலம், பெங்களுரு சென்று புலன் விசாரணை செய்ததில் ட்ரூ கிண்டில் டெக்னாலஜி பிரைவேட் லிமிடட் என்ற பெயரில் ஒரு கால்சென்டர் இருப்பதும் அங்கு சுமார் 110 நபர்கள் பணிபுரிவதும் தெரியவந்தது, அந்த கால்சென்டரை பிரமோதா மற்றும் பவான் ஆகியோர்கள் நடத்தி வருவதும் மேற்படி நபர்கள் மை கேஷ், அரோரா லோன், குவிக் லோன், டிமணி, ரேபிட் லோன், ஈஸி காஷ், நியூ ருபி, ருபி லோன் உள்பட பல்வேறு பெயர்களில் ஆன்லைன் உடனடி லோன் ஆப்கள் மூலம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு குறுகிய காலத்திற்கு அதிக வட்டிக்கு லோன் என்று ஆசைகாட்டி கடனை தந்துவிட்டு ஒரு வாரத்திற்குள் திரும்ப கட்டாதவர்களை தொடர்பு கொண்டு மிரட்டி வந்தது மேற்படி கால் சென்டரில் விசாரணை செய்யும்போது தெரியவந்துள்ளது.
பெங்களுரை சேர்ந்த பிரமோதா மற்றும் பவான் ஆகியோரை பயன்படுத்தி கொண்டு சீனாவை சேர்ந்த ஸீயோ யாமோ, வு யுவான்லன் ஆகியோர் நடத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பிரமோதா மற்றும் பவான் ஆகியோரை கடந்த 31-ந் தேதி கைது செய்து அவர்களிடமிருந்து லேப்டாப்கள். கைபேசிகள். கம்பெனி ஆவணங்கள் ஆகியவைகளை கைப்பற்றியும் கடந்த 01,01,2021ந் தேதி சென்னை கொண்டுவந்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
மேற்படி சீனர்கள் இருவரையும் தனிப்படையினர் ஜனவரி 1ந் தேதி பெங்களுரில் கைது செய்துள்ளார்கள்.
இவர்கள் அளித்த தகவலின்படி இவர்கள் ஹாங் என்ற சீனாவில் உள்ள நபர் இந்த எளிய கடன் மூலம் அதிக வட்டி வாங்கி மோசடியை நடத்தி வருவதும் அவருக்காக இவர்கள் இங்கு அலுவலகம் மற்றும் கால்சென்டர் (அழைப்பகத்தை) நடத்தி வருவதாகவும் தினமும் சீனாவிலிருந்து வரும் அறிவுரைகளின்படி தினமும் ஒவ்வொரு அழைப்பக பணியாளரும் குறைந்தது 10 பேருக்கு கடன் அளிக்க வேண்டும் என்றும் இல்லையேல் வார இறுதியில் அவர்களை பணிநீக்கம் செய்து விடுவார்கள் என்றும் கூறினார்,
கடனை பெற்று கட்டாதவர்களை மிரட்டி வசூலிக்கவே கால்சென்டர் நடத்தியதாகவும் தெரிவித்தனர், இந்த கடன் ஆப்களை நூத்தம் ராம் என்பவர் மூலம் வடிவமைத்தாகவும் தெரிவித்துள்ளனர்.
மேற்படி வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு. துணை ஆணையாளர்கள் முதல் காவல் ஆளிநர்கள் அடங்கிய தனிப்படையினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், இன்று நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார்.