தமிழ்நாடு

திரைப்படத் தயாரிப்பாளர் கே.பி. ஃபிலிம்ஸ் பாலு காலமானார்

2nd Jan 2021 09:20 AM

ADVERTISEMENTசென்னை: பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே.பி. ஃபிலிம்ஸ் பாலு காலமானார். 

29 ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்படும் சின்னத்தம்பி உள்பட 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ள கே.பி. ஃபிலிம்ஸ் பாலு உடல்நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை காலை காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சனிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாலு மறைவுக்கு திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

Tags : Passes Away K.P. Films balu passes away
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT