தமிழ்நாடு

பாரபட்சமின்றி அனைவருக்கும் கரோனா தடுப்பூசி: ராதாகிருஷ்ணன்

2nd Jan 2021 10:56 AM

ADVERTISEMENT


பாரபட்சமின்றி அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ''ஒரு நாளைக்கு 100 பேருக்கு கரோனா தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடப்பட்டதற்கான குறுஞ்செய்தி செல்போன்களுக்கு அனுப்பிவைக்கப்படும். தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் நபர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

தடுப்பூசி போடப்பட்டவர்கள் உடலில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்கின்றனவா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

உடலில் ஏதேனும் மாறுதல்கள் ஏற்பட்டால் அவர்களுக்கு மருந்து கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 0.1 சதவிகிதம் கூட தவறு நடக்கக் கூடாது என்பதற்காக முன்னேற்பாட்டு பணிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன'' என்று அவர் கூறினார்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT