தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் பெண் குழந்தைக்கு பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி

2nd Jan 2021 03:21 PM

ADVERTISEMENT


ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, அங்கு பெண் குழந்தைக்கு பெயர் சூட்டினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே.. பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

தனது சொந்தத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பழனிசாமி, இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது சத்ரக்குடி என்ற இடத்தில் தங்களது பெண் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு அவரது பெற்றோர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அப்பெண் குழந்தைக்கு சுதா என்று பெயர் சூட்டினார்.
 

Tags : tn cm palanisamy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT