தமிழ்நாடு

வியாபாரம் மந்தமாம்: புத்தாண்டில் டாஸ்மாக் விற்பனை ரூ.160 கோடி

2nd Jan 2021 01:27 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழகம் முழுவதும் புத்தாண்டை முன்னிட்டு ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. இதே நாளில் 2019-ஆம் ஆண்டில் ரூ.150 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

எனினும், இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகவில்லை என்றும், இரவு நேர ஊரடங்கும், கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டதும் அதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

அதேவேளையில், 2020, டிசம்பர் 30-ம் தேதி ரூ.113 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாகவும், 2019-ல் ரூ.92 கோடிக்கு விற்பனையானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் ரூ.48 கோடிக்கும், சேலத்தில் சுமார் ரூ.27 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. 
 

ADVERTISEMENT

Tags : tasmac new year chennai update
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT