தமிழ்நாடு

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம்: கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

2nd Jan 2021 03:58 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பெரிய குழுக்களால் எந்த பயனுமில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே.. 57 பொதுச் செயலர்கள், 104 செயலர்கள்! தமிழ்நாடு காங்கிரஸில் தடாலடி

தமிழக காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகளை நியமித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அது குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது, இவ்வளவு பெரிய கமிட்டியால் எந்த பயனுமில்லை. 32 துணை தலைவர்கள், 57 பொது செயலாளர்கள், 104 செயலாளர்கள் என நியமிக்கப்பட்ட யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது, அதிகாரம் இல்லாததால் யாருக்கும் பொறுப்பு என்பது இருக்காது என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்கலாமே.. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு நிர்வாகிகள் நியமனம்: வசந்தகுமாரின் மகன் பொதுச் செயலாளர்
 
ஒரு சில நிர்வாகப் பொறுப்புகளில் கார்த்தி சிதம்பரமும், பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் ப. சிதம்பரமும்  உள்ள நிலையில், இந்த விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

Tags : congress Chidambaram Karthi Chidambaram
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT