தமிழ்நாடு

தம்மம்பட்டியில் வெறிநாய் கடித்து 7 ஆடுகள் பலி

2nd Jan 2021 12:02 PM

ADVERTISEMENT

 

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் வெறிநாய் கடித்து குதறியதில் 7 ஆடுகள் பலியாகியுள்ளது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பனந்தோப்பை சேர்ந்தவர் ராமசாமி மகன் முத்துசாமி( 55). இவர், தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக, வயலில் கட்டி வைத்துள்ளார். அவற்றை, வெள்ளிக்கிழமை இரவு, வெறிநாய் கடித்து குதறியதில் 7 ஆடுகள் பரிதாபமாக பலியானது. கடந்த மாதம், தம்மம்பட்டி கருமாயி வட்டத்தில் துரை, அறிவு, செல்வம், செல்லம்மாள் மற்றும் நேரு நகரைச் சேர்ந்த மணி ஆகியோரின் ஆடுகளை வெறிநாய் கடித்ததில் 20 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி உள்ளது. 

இப்பகுதியில் ஆடு, கோழிகளை கடித்து சாகடிக்கும் வெறிநாயை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பேரூராட்சி நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தும்,எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், வெறிநாய்களுக்கு பலியாகும் ஆடுகளின் எண்ணிக்கை தொடர்வதாக, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ADVERTISEMENT

Tags : 7 goats killed rabies bite
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT