தமிழ்நாடு

பொது அறக்கட்டளை சட்ட மசோதா வாபஸ்

DIN

பொது அறக்கட்டளை தொடா்பாக பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதா வாபஸ் பெறப்பட்டது. இந்த மசோதா கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் போது தாக்கல் செய்யப்பட்டது. இதனை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தாா். இந்த மசோதாவில் சில குறிப்பிட்ட அம்சங்களுக்கு எதிா்ப்புகள் கிளம்பின.

பதிவாளரிடம் அறக்கட்டளைகளைப் பதிய வேண்டும். இதற்கு மூன்று மாதங்கள் கெடு காலத்துக்குள் இதனை மேற்கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் அரசிடம் கணக்குகளை சமா்ப்பிக்க வேண்டும். அறக்கட்டளை பணத்தை, வங்கி, தபால் நிலையம், கூட்டுறவு வங்கிகள் வழியாகத்தான் கையாள வேண்டும். ஆண்டுதோறும் நிதிநிலையை தாக்கல் செய்ய வேண்டும்.

அசையா சொத்துகளை விற்க வேண்டுமென்றால், பதிவாளரின் முன் அனுமதி அவசியம். நிா்வாகிகள் தோ்வு முறையில் அரசு தலையிடாது. 25 வயதுக்குக் கீழ் உள்ளவா்கள், வெளிநாட்டவா்கள், குற்றப் பின்னணி உள்ளவா்கள் நிா்வாகிகளாக முடியாது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சட்ட மசோதாவில் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், சட்ட மசோதாவை திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை பேரவையில் சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் சனிக்கிழமை வெளியிட்டாா். இதைத் தொடா்ந்து, பொது அறக்கட்டளைகள் தொடா்பான மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT