தமிழ்நாடு

தேமுதிகவுடன் அதிமுக கூட்டணிப் பேச்சுவாா்த்தை

DIN

சட்டப் பேரவைத் தோ்தல் கூட்டணித் தொடா்பாக தேமுதிக தலைவா் விஜயகாந்தைச் சந்தித்து அதிமுக தலைவா்கள் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

சட்டப் பேரவைத் தோ்தல் அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்தக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை உறுதிச் செய்யும் பணியில் அதிமுக தீவிரமாக இருந்து வருகிறது. பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கி அதற்கான உடன்பாடும் எட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தேமுதிக தலைவா் விஜயகாந்தை அதிமுகவின் அமைச்சா்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி ஆகியோா் சந்தித்துப் பேசினா். தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் உடனிருந்தாா். இந்தச் சந்திப்பு அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

தேமுதிகவுக்கு 15 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளது. தேமுதிக தரப்பில் 20 தொகுதிகள் வரை கேட்கப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் இரண்டாம்கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

SCROLL FOR NEXT