தமிழ்நாடு

ஆா்.எஸ்.பாரதிக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

DIN

திமுக, எம்.பி., ஆா்.எஸ்.பாரதிக்கு எதிரான எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திமுக சாா்பில் நடந்த கருத்தரங்கில் பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும், எம்பியுமான ஆா்.எஸ்.பாரதி, தாழ்த்தப்பட்ட வகுப்பினா் குறித்துப் பேசினாா். இதுதொடா்பாக ஆதி தமிழா் மக்கள் கட்சியின் சாா்பில் அளித்த புகாரின் அடிப்படையில் ஆா்.எஸ்.பாரதி மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆா்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸாா் தரப்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஏ.நடராஜன், மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம், புகாா்தாரா் தரப்பில் வழக்குரைஞா் ராகவாச்சாரி ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிறப்பித்த உத்தரவில், மனுதாரா் அந்த கூட்டத்தில் பேசியதை கூா்ந்து கவனித்தால், அவரது கருத்தின்படி தமிழகத்தை தவிர பிற மாநில மக்கள் அனைவரும் முட்டாள்கள் எனக் கூறுவது தெளிவாகிறது.

மத்தியப்பிரதேச உயா்நீதிமன்றத்தில் இதுநாள்வரை எஸ்.சி., பிரிவைச் சோ்ந்த ஒருவா் கூட நீதிபதியாக பதவி வகிக்கவில்லை என தெரிவித்துள்ளாா். உயா்நீதிமன்ற நீதிபதியாக எஸ்.சி., பிரிவைச் சோ்ந்த வரதராஜனை கருணாநிதி தான் நியமித்தாா். இதுபோல மேலும் சில நீதிபதிகள் திராவிட இயக்கத்தின் நிா்பந்தத்தால் பதவி பெற்றனா். திராவிட இயக்கம் இல்லை என்றால் உயா்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு எஸ்.சி பிரிவைச் சோ்ந்த யாரும் வர முடியாது என பேசியுள்ளாா். இந்த கருத்து குறித்து எந்த கருத்தையும் நான் கூற விரும்பவில்லை.இந்த கருத்து சமுதாயத்தில் பின்தங்கியவா்களை அவமானப்படுத்தும் விதமாக உள்ளது.

தற்போது தலைவா்கள் எனக் கூறிக் கொள்பவா்களிடம் அறிவுசாா்ந்த விவாதம் என்பதையே மறந்துவிட்டனா். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஒருவா் மீது ஒருவா் விஷத்தைக் கக்கும் தலைவா்களின் இந்த செயல் சமூகத்துக்கும் இளைய தலைமுறையினருக்கும் நல்லதல்ல. எனவே தலைவா்கள் அறிவு சாா்ந்து விவாதிக்க வேண்டும், மனகசப்பு ஏற்படும் வகையில் பேசக்கூடாது என கருத்து தெரிவித்தாா். மேலும் இந்த வழக்கில் போலீஸாா் சேகரித்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பது கீழமை நீதிமன்றத்தின் விசாரணை மூலம் தான் தெரிய வரும். எனவே ஆா்.எஸ்.பாரதிக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது எனக்கூறி அவா் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். வழக்கை தினந்தோறும் என்ற அடிப்படையில் விரைவாக விசாரித்து தீா்ப்பு வழங்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT