தமிழ்நாடு

வன்னியா்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல்

28th Feb 2021 09:32 AM

ADVERTISEMENT

வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். 
கல்வி, அரசுப் பணிகளில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவை பேரவையில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இம்மசோதாவின் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடும், சீா்மரபினருக்கு 7 சதவீத உள்ஒதுக்கீடும், இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதி பிரிவினருக்கு 2.5 சதவீத உள்ஒதுக்கீடும் வழங்குவதற்கு வழிவகை காணப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து மசோதா அரசிதழில் வெளியிடப்பட்டது. உள்இட ஒதுக்கீடு மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : Tamil Nadu Governor
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT