தமிழ்நாடு

ஈரோட்டில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி  

28th Feb 2021 06:56 PM

ADVERTISEMENT


ஈரோடு: ஈரோடு அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த மாவட்ட அளவிலான செஸ் போட்டியை எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் செஸ் போட்டியை தொடங்கி வைத்தனர். 

இதில் 9 வயதுக்கு உள்பட்டோர், 12 வயதுக்கு உள்பட்டோர், 15 வயதுக்கு உள்பட்டோர் மற்றும் அனைத்து வயதினர் என 4 பிரிவுகளிலும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக செஸ் போட்டி நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 220 பேர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிகாட்டினார்கள். இதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா மாலையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

ஒவ்வொரு பிரிவுகளிலும் 30 பேருக்கும், 7 வயதுக்கு உள்பட்ட சிறுவர்-சிறுமிகள் 10 பேருக்கும் என மொத்தம் 100 பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும், அனைத்து வயதினர் பிரிவில் மொத்தம் ரூ.2 0 ஆயிரம் மதிப்பிலான பரிசுகளும் வழங்கப்பட்டன.

இதில் திரைப்பட இயக்குனர் சக்ரா ராஜசேகர், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஜெகதீசன், காவிரி செல்வம், மதிவாணன், ரமேஷ், வரதன், சாய் கிருஷ்ணா செஸ் பவுண்டேசனைச் சேர்ந்த திருமுருகன், பாலசந்தர், பிரசன்னா உள்பட பலர் கலந்துகொண்டனர். 

முன்னதாக ஈரோடு மாவட்ட செஸ் சர்க்கிள் செயலாளர் எஸ்.ரமேஷ் வரவேற்றுப் பேசினார். முடிவில் பொருளாளர் சி.ரவிசந்திரன் நன்றி கூறினார்.

Tags : Erode
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT