தமிழ்நாடு

இஸ்ரோவிற்கு துணை முதல்வர் வாழ்த்து

DIN

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 உள்பட 19 செயற்கைக் கோள்கள், பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று (பிப்.28) காலை 10.24 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டில் கொண்டு செல்லப்பட்ட 19 செயற்கைக்கோள்களும் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ''ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்.

இதில், கூடுதல் சிறப்பம்சமாக 19 செயற்கை கோள்களில் தமிழகத்தின் சில பொறியியல் கல்லூரி மாணவர்களின் செயற்கை கோள்களும் இடம்பெற்றுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இளம் விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT