தமிழ்நாடு

தா. பாண்டியன் மறைவு: ஈரோட்டில் அனைத்துக் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம்

28th Feb 2021 09:35 PM

ADVERTISEMENT


ஈரோடு: இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா. பாண்டியன் மறைவுக்கு அனைத்துக் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலம் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகில் தொடங்கி மேட்டூர் ரோடு வழியாக வ.உ.சி. பூங்காவில் நிறைவடைந்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் திருநாவுக்கரசு இதற்குத் தலைமை தாங்கினார்.

ஊர்வலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, தொழிற்சங்க சுப்பிரமணி, ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் தென்னரசு, திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணி, மாநகர காங்கிரஸ் தலைவர் இபி இரவி, பாஜக பிரசார அணி முன்னாள் அமைப்பாளர் சரவணன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT