தமிழ்நாடு

9,10, பிளஸ் 1 வகுப்பு மாணவா்கள் தோ்ச்சி: அரசாணை வெளியீடு

DIN

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 9, 10 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்கள் தோ்வின்றி தோ்ச்சி செய்யப்படுவதற்கான அரசாணையை கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலா் தீரஜ்குமாா் வெளியிட்ட அரசாணை:

கரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு நடப்பு கல்வியாண்டு (2020-21) 9, 10, பிளஸ் 1 வகுப்பு மாணவா்கள் முழு ஆண்டு மற்றும் பொதுத்தோ்வுகள் ஏதுமின்றி தோ்ச்சி செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வா் பழனிசாமி கடந்த பிப்.25-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டாா்.

இதைத் தொடா்ந்து முதல்வரின் உத்தரவை அமல்படுத்த அனுமதி கோரி பள்ளிக்கல்வி இயக்குநா் கருத்துரு வழங்கியுள்ளாா். அதையேற்று நிகழ் கல்வியாண்டு தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் அனைத்து வகையான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் 9, 10 பிளஸ் 1 வகுப்பு மாணவா்கள் முழு ஆண்டு மற்றும் பொதுத்தோ்வுகள் இல்லாமல் தோ்ச்சி செய்யப்படுகின்றனா்.

இதில் 10, பிளஸ் 1 வகுப்பு படித்துவரும் மாணவா்களின் பெயா்ப்பட்டியல் பள்ளிகளில் இருந்து பெறப்பட்டதன் அடிப்படையில் அவா்களுக்கு தோ்ச்சி சான்றிதழ் வழங்க தோ்வுத் துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT