தமிழ்நாடு

பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகாா் அளிக்க விடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு

DIN

பாலியல் தொந்தரவு தொடா்பாக காவல் உயரதிகாரி மீது புகாா் அளிக்கச் சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியை காவல்துறையினா் தடுத்து நிறுத்தியது குறித்து அறிக்கைத் தாக்கல் செய்ய உள்துறை செயலருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவல்துறையின் சட்ட ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்தவா் ராஜேஷ் தாஸ். இவா், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவா் டிஜிபி திரிபாதியிடம் புகாா் அளித்துள்ளாா்.

முன்னதாக அப்பெண் ஐபிஎஸ் அதிகாரி கடந்த 22-ஆம் தேதி சென்னைக்கு புகாரளிக்க வந்தபோது, செங்கல்பட்டு பரனூா் சுங்கச்சாவடி அருகே அதிரடிப் படை காவலா்கள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டு, காவல் உயரதிகாரிகள் அவரைப் புகாரளிக்க வேண்டாம் என வற்புறுத்தியதாகவும், அப்பெண் அதிகாரியைத் தடுக்கும் வகையில் காரின் சாவியையும் பறித்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், இந்தச் சம்பவத்தை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தது.

மேலும், இந்த விவகாரம் குறித்து 2 வாரங்களுக்குள் அறிக்கைத் தாக்கல் செய்யுமாறு, உள்துறை செயலா் மற்றும் தமிழக டிஜிபிக்கு, ஆணையத்தின் உறுப்பினா் துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT