தமிழ்நாடு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

27th Feb 2021 03:40 PM

ADVERTISEMENT

 

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு  ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

சதுரகிரி கோயிலில்  பிப்.24 முதல் பிப்.27-ஆம் தேதி வரை என நான்கு நாள்கள் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத் துறையினா் அனுமதி அளித்துள்ளனர். மாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே அடிவாரத்தில் குவிந்தனர். பக்தர்களின் வசதிக்காக, ஸ்ரீவில்லிபுத்தூா், விருதுநகா், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

காலை 6.30 முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினியால் கைகளைச் சுத்தம் செய்த பின்னரே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

மாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. பின்னா், சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோயில் அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, நிர்வாக அதிகாரி விஸ்வநாத் ஆகியோா் செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT