தமிழ்நாடு

தூத்துக்குடியில் ராகுல் பிரசாரம்: வழக்குரைஞர்களுடன் உரையாடல்

DIN

தூத்துக்குடி: காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் உள்ள வஉசி கல்லூரி  கூட்ட அரங்கில் வழக்குரைஞர்களுடன் ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார். வழக்குரைஞர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு ராகுல் பதிலளிக்கும் வகையில் இந்த உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தென்தமிழகத்தில் ராகுல் காந்தி 27, 28, மாா்ச் 1 ஆகிய 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக தில்லியிலிருந்து விமானம் மூலம் இன்று காலை திருவனந்தபுரம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு முற்பகல் 11 மணியளவில் வந்த அவருக்கு கட்சி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கிருந்து வாகனத்தில் வஉசி கல்லூரிக்கு வந்த ராகுல் காந்திக்கு சாலை முழுவதும் பொதுமக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

தொடா்ந்து, தூத்துக்குடி வஉசி கல்லூரியில் வழக்குரைஞா்களுடன் உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

பின்னா், குரூஸ் பா்னாந்து சிலை முன் பொதுமக்களிடம் பேசும் அவா், புல்லாவெளி கிராமத்தில் உள்ள உப்பளத்துக்குச் சென்று தொழிலாளா்களுடன் உரையாடுகிறாா்.

இதையடுத்து, முக்காணி, குரும்பூா், ஆழ்வாா்திருநகரி, நாசரேத், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளும் அவா், இட்டமொழி வழியாக, திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரிக்கு வந்து, மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா். இரவில் திருநெல்வேலியில் தங்கிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை தூய சவேரியாா் கல்லூரியில் கல்வியாளா்களுடன் கலந்துரையாடுகிறாா்.

பின்னா், திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு நெல்லையப்பா் கோயிலுக்கு செல்லும் அவா், நகரத்தில் உள்ள காந்தி சிலை அருகே பொதுமக்களிடையே உரையாற்றுகிறாா். அதையடுத்து, தென்காசி மாவட்டம் ஆலங்குளம், தென்காசி வழியாக புளியங்குடி சென்று, இரவில் தென்காசியில் தங்குகிறாா். மாா்ச் 1ஆம் தேதி கன்னியாகுமரி செல்கிறாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT