தமிழ்நாடு

வன்கொடுமை தடைச் சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய ஆர்.எஸ். பாரதியின் மனு தள்ளுபடி

DIN

சென்னை: தனக்கு எதிரான வன்கொடுமை தடைச் சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திமுக சார்பில் நடந்த கருத்தரங்கில் பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் குறித்துப் பேசினார். இதுதொடர்பாக ஆதி தமிழர் மக்கள் கட்சியின் சார்பில் அளித்த புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ்.பாரதி மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக புகார் அளித்து வருவதால், அதற்காக பழிவாங்கும் நோக்கத்தில் என் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். எனவே அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,  ஆர்.எஸ். பாரதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பட்ட முகாந்திரம் உள்ளது. இந்த குற்றச்சாட்டுகள்  நிரூபணமாகிறதா, இல்லையா என்பதை, காவல்துறை சேகரித்த ஆதாரங்களை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டியது,  விசாரணை நீதிமன்றம் தான் எனக்கூறி, வழக்கை ரத்து செய்ய மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் குற்ற விசாரணை முறைச் சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்றி, நாள்தோறும் சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி, தாமதமின்றி  வழக்கை முடிக்க வேண்டும். அறிவுப் பூர்வமான விவாதங்களை நடத்தாமல், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்கள், எதிர்தரப்பினர் மீது விஷம் கக்குவது வழக்கமாகி விட்டதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இது இளைய தலைமுறையினருக்கு நல்லதல்ல என கருத்து தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT