தமிழ்நாடு

மாசி மகம்: துறையூர் சிவன் கோவிலில் பஞ்ச மூர்த்திகள் அபிஷேகம்

DIN

திருச்சி மாவட்டம் துறையூர் ஆத்தூர் சாலையில் உள்ள ஸ்ரீ நந்திகேஸ்வரர் உடனுறை சம்பத் கௌரி கோயிலில் மாசி மகத்தையொட்டி சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோயிலின் செயல் அலுவலர் யுவராஜ் அனுமதியுடன் மாசி மகத்தையொட்டி கோயில் குருக்கள் பஞ்சாமி, கோபால், சிவராமன்,  ஞானஸ்கந்தன் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் விநாயகர், சுவாமி அம்பாள் சோம ஸ்கந்தர், சம்பத் கெளரி, வள்ளி தெய்வானை முருகர், சண்டீகேஸ்வரர் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு மஞ்சள் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள், பால் மற்றும் பழ வகைகள், பூரண கும்ப புண்ணிய தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்தனர். 

இதனையடுத்து சிறப்பு அலங்காரமும் மகா தீபாரதனையும் நடைபெற்றது. இதில் உபயதாரர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிவ தொண்டர்கள் தேவாரம் திருவாசகம் பதிகங்கள் ஓதினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT