தமிழ்நாடு

இயற்கைத் தத்துவங்களே அறிவியலை கட்டமைக்கின்றன: பொ.குழந்தைவேல்

DIN

இயற்கையில் பொதிந்து கிடக்கும் எண்ணற்ற தத்துவங்களே அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஆதாரமாகத் திகழ்கின்றன. எனவே, ஆராய்ச்சியாளர்கள் இயற்கையைக் கூர்ந்து நோக்கினால் பல அற்புதக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும் எனப் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் கூறினார்.

தேசிய அறிவியல் தின விழா பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று (27.02.2021) நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆற்றல் சார் அறிவியல் துறைத் தலைவர் (பொறுப்பு) இணைப் பேராசிரியர் கே.ஏ.ரமேஷ்குமார் வரவேற்றார். விழாவிற்குத் தலைமை வகித்து உரை நிகழ்த்திய பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் தேசிய அறிவியல் தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 

அப்போது அவர் “இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான சர்.சி.வி.ராமன் இயற்கையின் ஒரு பகுதியான ஒளியின் உள்ளார்ந்த பண்புகளை ஆய்வுக்குள்ளாக்கியே தன்னுடைய ஆய்வினை, உலகப் புகழ்பெற்ற ஆய்வாக மாற்றினார்.ரைட் சகோதரர்கள், ஸ்டீபன் ஹாப்கின்ஸ் போன்றவர்கள் தமது விடாமுயற்சியினால் ஆய்வுகளை நிகழ்த்திக் காட்டினார்கள். 

உடல்நலம் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்த வண்ணம் காலம் ஒரு சுருக்கமான அறிமுகம் என்ற மிகச் சிறப்பான ஆய்வு நூலை ஸ்டீபன் ஹாப்கின்ஸ் உருவாக்கினார். இதுதான் இன்றைய ஆய்வாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறையாகும். அறிவியல் உலகில் மருத்துவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. 

இந்தியாவில் சோதனைக் குழாய் குழந்தை, விஷக் காய்ச்சலுக்கான காரணிகளை மருத்துவர்களே கண்டறிந்தனர்.இன்றைய இளம் ஆய்வாளர்கள் இயற்கையிலிருந்து கிடைக்கும் தரவுகளை நேர்த்தியாக கையாண்டாலே தரமான ஆய்வுக் கட்டுரைகளைப் படைக்க இயலும்.” என்றார்.

இந்நிகழ்வில் பிரபல நரம்பியல் நிபுணர் மருத்துவர் ஆர்.நடராஜன் சிறப்புரையாற்றினார். உதவிப் பேராசிரியர் பி.மாதேஸ்வரன் நன்றி கூறினார். விழாவில் தேர்வாணையர் (பொறுப்பு) எஸ்.கதிரவன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT