சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட வருவாய்த் துறையினருக்குத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சீர்காழி வருவாய்க் கோட்டாட்சியர் நாராயணன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் ஹரிதரன் முன்னிலை வகித்தார்.
இதில் மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் பங்கேற்று பேசுகையில் தேர்தல் பணியில் ஈடுபடும் கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அரசியல் கட்சியினர்கள், அரசு ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கங்கள் அளித்துப் பேசினார். இதில் மண்டல துணை வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் பங்கேற்றனர்.