தமிழ்நாடு

சேலம் மாநகராட்சி பகுதியில் சுவர் விளம்பரங்கள் அழிப்பு

DIN

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அரசு விளம்பரங்கள் அகற்றப்பட்டது. 

இதுபோல் மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் உள்ள அரசு விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் மாநகராட்சி பகுதியில் இன்று காலை முதல் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.

சேலம் பெரியார் மேம்பாலம் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் விளம்பர சுவரொட்டிகளை அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள். 

சுவர்களில் எழுதப்பட்டிருந்த அரசு விளம்பரங்களும், அரசியல் கட்சியினரின் எழுதி இருந்த விளம்பரங்களும் அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர சேலம் முழுவதும் அரசியல் கட்சியினர் பேனர்கள் கட்டியிருந்தனர். இந்த பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், சேலம் மாவட்ட ஆட்சியருமான ராமன் அனைத்துத் துறை அரசு அதிகாரிகளும், தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என்றும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT