தமிழ்நாடு

இன்று அதிமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் 

27th Feb 2021 11:46 AM

ADVERTISEMENT


சென்னை: அதிமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெறுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள்  சனிக்கிழமை காலை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதையடுத்து அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT