தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் பாமக போட்டி

27th Feb 2021 06:35 PM

ADVERTISEMENT


அதிமுக - பாமக இடையிலான சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டியது. இதன்மூலம், அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுவது குறித்த பேச்சுவார்த்தை சென்னையிலுள்ள தனியார் விடுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக அமைச்சர்கள், பாமக சார்பில் அன்புமணி, ஜி.கே. மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு குறித்த உடன்பாடு எட்டியது.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

ADVERTISEMENT

அப்போது ஓ. பன்னீர்செல்வம் கூறியது:

"அதிமுக தலைமையிலான கூட்டணியில் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது."

எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளன என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

Tags : ADMK Alliance
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT