தமிழ்நாடு

சட்டப்பேரவை பிற்பகல் 3 மணிக்கு கூடுகிறது

DIN

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் தேதி இன்று மாலை அறிவிக்கப்படவுள்ள நிலையில், சட்டப் பேரவையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

புது தில்லியில் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தேர்தல் அட்டவணையை வெளியிடுகிறார்.

தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம், கேரளம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது நடைபெறும், தமிழகத்துக்கு எத்தனை கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது என்பது உள்ளிட்ட தகவல்கள் இன்று வெளியாக உள்ளது.

இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில், இன்று மாலை முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரவிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT