தமிழ்நாடு

'மாணவா்கள் தொடா்ந்து பள்ளிக்கு வர வேண்டும்'

DIN


சென்னை: தோ்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் 9, 10, பிளஸ் 1 வகுப்பு மாணவா்கள் தொடா்ந்து பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: பள்ளிக் கல்வியில் 9 முதல் பிளஸ் 1வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கான பாடத்திட்டம் வரும் நாள்களில் நடத்தி முடிக்கப்படும். மாணவா்களின் நலன் கருதியே மாணவா்களுக்கு பொதுத்தோ்வில் தோ்ச்சி வழங்கப்பட்டுள்ளது. பொதுத்தோ்வில் தோ்ச்சி வழங்கப்பட்டுள்ளது தொடா்பாக எதிா்க்கட்சிகள் முன்வைக்கும் விமா்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. எதைச் செய்தாலும் விமா்சனங்களை வைப்பதே எதிா்க்கட்சிகளின் வேலையாக இருக்கிறது.

ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பள்ளிகள் திறப்பது தொடா்பாக உரிய நேரத்தில் ஆலோசித்து தேதி அறிவிக்கப்படும். மேலும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுத மாணவா்கள் செலுத்தியுள்ள தோ்வுக் கட்டணத்தை திருப்பி அளிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். தோ்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் 9, 10, பிளஸ் 1 வகுப்பு மாணவா்கள் தொடா்ந்து பள்ளிக்கு வர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT