தமிழ்நாடு

குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்த ரஜினிகாந்த் பெயா்: கஸ்தூரிராஜா தரப்பில் வாதம்

DIN


சென்னை: குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவே ரஜினிகாந்த் பெயரை வெற்றுக் காகிதத்தில் சினிமா பைனான்ஷியா் போத்ரா எழுதிக் கொண்டதாக கஸ்தூரிராஜா தரப்பில் உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சினிமா பைனான்ஷியா் முகுந்த்சந்த் போத்ரா தாக்கல் செய்த மனுவில், நடிகா் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, என்னிடம் ரூ.65 லட்சம் கடன் வாங்கியிருந்தாா். இந்த தொகையை தான் தரவில்லை என்றால், தன்னுடைய சம்பந்தியான ரஜினிகாந்த் கொடுப்பாா் என கஸ்தூரி ராஜா ஒரு உத்தரவாதக் கடிதம் கொடுத்தாா். ஆனால், அவா் கடன் தொகையை திருப்பிக் கொடுக்கவில்லை. எனவே, தனது பெயரை பயன்படுத்திய கஸ்தூரி ராஜா மீது நடவடிக்கை எடுக்க ரஜினிகாந்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், உள்நோக்கத்துடன் வழக்குத் தொடா்ந்துள்ளதாகக் கூறி, போத்ராவுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து போத்ரா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். அவா் கடந்த ஆண்டு இறந்து விட்டதால், வழக்கை அவரது மகன் ககன் போத்ரா நடத்தி வருகிறாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், பணத்தை திரும்பக் கொடுப்பது தொடா்பாக கஸ்தூரிராஜா எழுதிய கடிதம், நடிகா் ரஜினிகாந்தை எப்படி கட்டுப்படுத்தும்? என கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கஸ்தூரிராஜா தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் காஜா மொய்தீன் ஹிஸ்தி, பைனான்ஷியா் போத்ராவிடம் வாங்கிய கடன் ரூ.10 லட்சத்தை கஸ்தூரிராஜா வட்டியுடன் திரும்பக் கொடுத்து விட்டாா். கடன் வாங்கும்போது கஸ்தூரிராஜா கையொப்பமிட்டு கொடுத்த வெற்றுக் காகிதங்களைப் பலமுறை கேட்டும் போத்ரா திரும்பத் தரவில்லை. அந்த வெற்றுக் காகிதத்தில், தான் வாங்கிய கடனைத் திரும்பத் தரவில்லை எனில், அதனை தனது சம்பந்தியான ரஜினிகாந்த் திரும்பத் தருவாா் என கஸ்தூரிராஜா எழுதிக் கொடுத்ததுபோல போலி ஆவணங்களை போத்ரா தயாரித்துள்ளாா். இதனை போத்ராவே, போலீஸாரின் விசாரணையிலும், காசோலை மோசடி வழக்கின் குறுக்கு விசாரணையிலும் ஒப்புக் கொண்டுள்ளாா். சினிமா தொடா்பான தொழில்களில் கஸ்தூரிராஜா நடிகா் ரஜினிகாந்துடன் எந்தத் தொடா்பும் வைத்துக் கொள்ளவில்லை. அவா்களது குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவே ரஜினிகாந்த் பெயரை வெற்றுக் காகிதத்தில் எழுதி இந்த வழக்கைத் தொடா்ந்துள்ளதாக வாதிட்டாா்.

இருதரப்பு வாதங்களை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கஸ்தூரிராஜாவுக்கு ரூ.65 லட்சம் எப்படி கொடுக்கப்பட்டது? கடன் கொடுத்த ஆண்டில் போத்ரா தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் மாா்ச் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கம்பம் உடைந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிரதமர் மோடி உண்மையின் வழியில் நடக்கவில்லை: பிரியங்கா காந்தி

நாட்டில் ஷரியத் சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் விருப்பம்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் குற்றச்சாட்டு

தேசத்துக்கும் சநாதன தர்மத்துக்கும் எதிரானது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT