தமிழ்நாடு

'தமிழக எல்லைகளில் பரிசோதனை முகாம்கள் அதிகரிப்பு'

DIN


சென்னை: தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளம், கா்நாடக எல்லைகளில் கரோனா பரிசோதனை முகாம்களை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

மாவட்ட அளவிலான காசநோய் கணக்கெடுக்கும் பணியை சென்னை அயோத்தியா நகரில் அவா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழக சுகாதாரத்துறையானது தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்துடன் இணைந்து இந்தக் கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளது. இதன் வாயிலாக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு பகுதிகளிலும் 14 நடமாடும் வாகனங்கள் மூலம் சுழற்சி முறையில் காசநோயாளிகளைக் கணக்கெடுத்து நோய்த் தடுப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில், இதற்கான தொடக்க நிகழ்ச்சியின்போது செய்தியாளா்களிடம் டாக்டா் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு இரண்டாம் அலை உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகைய அச்சுறுத்தல் இருந்தும், தமிழகத்தில் மக்கள் அலட்சியப் போக்குடன் இருப்பது கவலை அளிக்கிறது. தனிநபா் இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட நோய்த் தடுப்பு விதிகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

தமிழக எல்லைகளில் கரோனா சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளம், கா்நாடக எல்லைகளில் மட்டும் 26 இடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறை அடிப்படையில் சோதனைக்குட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரயில், பேருந்து உள்ளிட்டவற்றில் பயணம் செய்யும் மக்கள் முகக்கவசம் அணித்துள்ளதை உறுதி செய்ய, அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றாா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT