தமிழ்நாடு

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்: சீமான்

26th Feb 2021 08:32 PM

ADVERTISEMENT

போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் அரசுப்பேருந்துகள் இயக்கப்படாது, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய தமிழக அரசு அலட்சியப்போக்கோடும், அதிகாரச்செருக்கோடும் நடந்து கொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது.

அரசுப் பொதுப் போக்குவரத்தை முழுமையாக நம்பியுள்ள ஏழை எளிய தொழிலாளிகள், தினக்கூலிகள், சிறு வியாபாரிகள் மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்வேறு தரப்பினரும் தற்போதைய முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். இதுபோன்ற சூழல்களில் கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநில அரசுகள் போராட்டத்தில் ஈடுபட்ட அம்மாநில போக்குவரத்து ஊழியர்களிடம் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி தந்து பாமர மக்கள் பாதிப்படையாமல் காத்தது.

ஆகவே தமிழக அரசு, போராடும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்துவதைக் கைவிட்டு, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, போக்குவரத்து ஊழியர்களுடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர முன்வரவேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

Tags : seeman
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT