தமிழ்நாடு

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடக்கி வைத்தார் பிரதமர்

DIN

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

கோவையில் அரசு நலத்திட்டங்களைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர்  நரேந்திர மோடி கலந்துகொண்டு ரூ.12,400 கோடி மதிப்புள்ள திட்டங்களைத் தொடக்கி வைத்தார்.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 8 வழி கோரப்பள்ளம் பாலம் மற்றும் ரயில்வே பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

பிரதமரின் நகர்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட  குடியிருப்புகளையும்,  நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் அமைத்த 700 மெகாவாட் சூரிய மின் சக்தி திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

கீழ்பவானி கால்வாய் நவீனப்படுத்தும் திட்டம்

ஈரோடு கீழ்பவானி கால்வாய் நவீனப்படுத்தும் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தில் 9 ஸ்மார்ட் சிட்டிகளில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கவும் அடிக்கல் நாட்டினார்.

24 மணிநேரமும் செயல்படும் வகையில் கோவை, சேலம் உள்பட 9 நகரங்களில் கட்டுப்பாட்டு மையம் அமைகிறது. 

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 5 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

SCROLL FOR NEXT