தமிழ்நாடு

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: ஆலை உரிமையாளர் கைது

25th Feb 2021 09:05 PM

ADVERTISEMENT

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடிவிபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் தங்கராசு கைது செய்யப்பட்டார்.

சிவகாசி அடுத்த சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இங்குள்ள மூன்று அறைகள் இடிந்து சேதமடைந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கிய 3 பேர் உயிரிழந்த நிலையிலும், சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆலை உரிமையாளர் மற்றும் போர்மேன் ஆகியோர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஏற்கனவே சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் கடந்த 12-ம் தேதி வெள்ளிக்கிழமை பட்டாசு ஆலை வெடி விபத்து நடந்தது. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 23 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.

Tags : sivakasi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT