தமிழ்நாடு

கோவை பாப்பம்மாளைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி

25th Feb 2021 11:05 PM

ADVERTISEMENT


இயற்கை விவசாயத்தில் சிறப்பான பங்களிப்பு செய்து வரும் கோவை பாப்பம்மாளை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை நேரில் சந்தித்தார்.

அரசு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை கோவை வந்தார்.

அப்போது, இயற்கை விவசாயத்தில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக அண்மையில் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 105 வயது மூதாட்டி பாப்பம்மாளை அவர் சந்தித்தார். 

இதைத் தொடர்ந்து, இருவரும் கைகூப்பி வணக்கம் செய்துகொள்ளும் புகைப்படத்தை பிரதமர் மோடி தனது முகநூல் மற்றும் சுட்டுரைப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

Tags : modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT