தமிழ்நாடு

புதுச்சேரி மண் பன்முகத்தன்மையின் அடையாளம்: பிரதமர் மோடி

DIN

புதுச்சேரி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பன்முகத் தன்மையின் அடையாளமாக புதுச்சேரி விளங்குகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி இன்று வருகை தந்துள்ளார். பகல் 11.30 மணிக்கு புதுச்சேரிக்கு வந்த அவா், ஜிப்மா் கலையரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, முடிவுற்ற அரசு கட்டடங்களைத் திறந்து வைத்தும், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் துறைமுக விரிவாக்கம் உள்ளிட்ட மத்திய அரசின் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டி வைத்தும் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, புதுவை மக்கள் ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்கின்றனர். புதுச்சேரி மண் பன்முகத்தன்மையின் அடையாளம். இங்கிருந்து ஏராளமான புரட்சியாளர்கள் வந்துள்ளனர்.

புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களால் சாலைப் போக்குவரத்து வசதிகள் மேம்படும். உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளால் மக்களின் வாழ்க்கைத்தரம் அதிகரிக்கும்.

காரைக்கால் - நாகை தேசிய நெடுஞ்சாலை மும்மதங்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை, திருநள்ளாறு, வேளாங்கண்ணி, நாகூர் ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று வர பொதுமக்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளன.

கிராமப்புற, கடற்கரை இணைப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய நான்கு வழிச் சாலை புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT