தமிழ்நாடு

எடப்பாடி-போடி தொகுதிகளுக்கு முதல்வர், துணை முதல்வர் விருப்ப மனு

DIN

சென்னை: அதிமுக சார்பில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் புதன்கிழமை தொடங்கியது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி கே.பழனிசாமியும் விருப்ப மனுக்களை அளித்தனர்.

அமைச்சர்கள் மனு: இதையடுத்து அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் விருப்ப மனு பெற்று வழங்கினர். திண்டுக்கல்லில், திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடவும், கோபிசெட்டிபாளையத்தில் கே.ஏ. செங்கோட்டையனும், சென்னை ராயபுரத்தில் டி.ஜெயக்குமாரும், குமாரபாளையத்தில் பி.தங்கமணியும், தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணியும் போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.

அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடவும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட வைத்திலிங்கமும் விருப்ப மனுக்களை அளித்தனர்.

ஒரே நாளில்... விருப்ப மனு தொடங்கிய நாளான புதன்கிழமை மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினம் என்பதால் கட்சி அலுவலகத்துக்கு வந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலரும், விருப்ப மனுக்களைப் பெற்று அங்கேயே பூர்த்தி செய்து அளித்தனர்.

விருப்ப மனுக்களை மார்ச் 5-ஆம் தேதி வரை, அதிமுக தலைமை அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என்று கட்சி சார்பில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தலைமை அலுவலக நிர்வாகிகளிடம் புதன்கிழமை மனு அளித்த இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி. உடன் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான  ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT