தமிழ்நாடு

ராமநாதசுவாமி கோயிலுக்கு புதிய ஸ்படிக லிங்கம்: சிருங்கேரி சாரதா பீடம் வழங்கியது

DIN

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு, சிருங்கேரி சாரதா பீடம் சார்பில் மூன்றாவது முறையாக ரூ.10 லட்சம் மதிப்பிலான ஸ்படிக லிங்கம் புதன்கிழமை வழங்கப்பட்டது. 

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ஆதிசங்கரர் சார்பில் 1932-ஆம் ஆண்டுக்கு முன்னர் ஸ்படிக லிங்கம் வழங்கப்பட்டது. முதல்முதலாக வழங்கப்பட்ட இந்த ஸ்படிக லிங்கம் சேதமடைந்ததையடுத்து இரண்டாவது முறையாக ஸ்படிக லிங்கம் ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், கடந்த பிப்.22-ஆம் தேதி காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் செய்ய வந்தார். அப்போது அங்கிருந்த  ஸ்படிக லிங்கம் சேதமடைந்திருப்பது தெரியவந்தது. இதனால் ஸ்படிக லிங்க பூஜைகள் நிறுத்தப்பட்டது. அப்போது, பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சார்பில் புதிய ஸ்படிக லிங்கம் வாங்கித் தருவதாக கோயில் நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக ஸ்படிக லிங்கத்தை ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையர் எஸ்.கல்யாணியிடம் சிருங்கேரி சாரதா பீட நிர்வாகிகள் புதன்கிழமை வழங்கினர். அந்த லிங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான 1.155 கிலோ எடையுள்ள வெள்ளி சம்படம், ருத்ராட்ச மாலை,  ரூ.1.15 லட்சம் மதிப்பிலான தங்க மாலை உள்ளிட்ட பொருள்களும் வழங்கப்பட்டன. 

அதைத்தொடர்ந்து, சுவாமி சந்நிதி முன் அந்த ஸ்படிக லிங்கம் வைக்கப்பட்டு சிருங்கேரி சாரதா பீடம் முதன்மை குருக்கள் சீதாராம சர்மா தலைமையில் மகா யாக பூஜை நடத்தப்பட்டது. வியாழக்கிழமை முதல் இந்த ஸ்படிக லிங்கம் பக்தர்கள் வழிபாட்டுக்கு வைக்கப்படவுள்ளதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர். 

இந்த நிகழ்ச்சியில்,ஜெகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிகள், ஜெகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி மகா சுவாமிகள், கிருஷ்ணமூர்த்தி, நிரஞ்சன் பாபர்ட், கிருஷ்ணபிரசாத்பட், கிரன்பட் மற்றும் ஆடிட்டர் ராமநாதன், ராமேசுவரம் சிருங்கேரி சாரதா பீடம் மேலாளர் நாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

SCROLL FOR NEXT