தமிழ்நாடு

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

DIN

சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடியும் வரை, மாதம் ரூ.1,000 இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என துறையின் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இது தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்திய பிறகு, சென்னையில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி: ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடியும் வரை இம்மாதத்தில் இருந்து போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1,000 வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு பணிக்குச் செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். முதல்வரின் அறிவுறுத்தலின்படி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும். அதில் சுமுகமாக இறுதி முடிவு எட்டப்படும்.

ஏற்பாடுகள் தயார்: எந்த அரசும் செய்யாத அளவுக்கு, போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்குச் சென்ற முறை நல்ல ஊதிய உயர்வு அதிமுக அரசு வழங்கியது. அதே போல் ஓய்வூதியர்களுக்கும் பணப் பலன் கொடுத்துள்ளோம். எனவே, போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இடைக்கால நிவாரணத்தை ஏற்றுக் கொண்டு, பணிக்குச் செல்வார்கள் என நம்புகிறோம். அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள அண்ணா தொழிற்சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களின் ஆதரவோடு, பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT