தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

25th Feb 2021 11:50 AM

ADVERTISEMENT

 

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.35,144-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக உயா்ந்து வந்தது.

இந்நிலையில்,சென்னையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.20 குறைந்து, ரூ.35,144-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து, ரூ.4,393-ஆக உள்ளது. 

ADVERTISEMENT

வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து, ரூ.75.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து, ரூ.75,200 ஆகவும் விற்பனையாகிறது. 

வியாழக்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம்............................. 4,393

1 சவரன் தங்கம்...............................35,144

1 கிராம் வெள்ளி.............................75.20

1 கிலோ வெள்ளி.............................75,200

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,413

1 சவரன் தங்கம்...............................35,304

1 கிராம் வெள்ளி.............................74.70

1 கிலோ வெள்ளி............................74,700
 

Tags : தங்கம் gold rate
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT