தமிழ்நாடு

கடலூரில் முழுமையாக இயங்கிய தனியார் பேருந்துகள்; 25% அரசுப் பேருந்துகள் இயக்கம்

DIN

கடலூர்: 14 ஆவது ஊதியக்குழு ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்தக் கோரி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். 

அதன்படி கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 போக்குவரத்து பணிமனை முன்பும் போராட்ட ஆதரவு தொழிற்சங்கத்தினர் குவிந்தனர். அவர்கள் பேருந்தினை இயக்க வந்த ஓட்டுநர்கள், மாற்று ஓட்டுநர்களை தடுக்க முற்பட்டனர். 

இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மாவட்டத்தில் மதியம் 12 மணி வரையில் 460 பேருந்துகள் இயக்கப்பட வேண்டியதில் 120 பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர். 

ஆனால் 10 சதவீதத்திற்கும் குறைவான அளவில் இயக்கப்பட்டதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. எனினும், தனியார் பேருந்துகள் முழுமையாக இயங்கின.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT