தமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் ஏற்றுமதி முனையம் அமைக்க வேண்டும்: ஈடிசியாவின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

DIN


ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஏற்றுமதி முனையம் அமைக்க வேண்டும் என ஈடிசியா(ஈரோடு மாவட்டட சிறு தொழில் சங்கம்) பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள ஈடிசியா வளாகத்தில் ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் 38-வது பொதுக்குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் முன்னாள் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.

இதில், ஈரோடு மாவட்டம் சிப்காட் அல்லது பெருந்துறை அருகிலோ ஏற்றுமதி முனையம் அமைக்க வேண்டும். ஜி.எஸ்.டி.,யில் பணத்தினை திரும்ப பெறும் கொள்கையை எளிமைப்படுத்திட வேண்டும். உள்ளீட்டு வரிக்கடனில்(ஐடிசி) கார் மற்றும் கனரக வாகனம் வாங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். துணி பைக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை 5 சதவீதம் குறைக்க வேண்டும். 

விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் ஈரோட்டில் ஒரு கிளை ஏற்படுத்த வேண்டும். அதேபோல், உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் அவை சார்ந்த தொழில்கள் அதிகம் உள்ளதால் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் கிளை அமைக்க வேண்டும்.

4 சதவீத உற்பத்தி மாதாந்திர மின் நிறுத்தத்தினால் மட்டும் ஏற்படுகிறது, இதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி பரிமாற்றத்திற்கு இடையூறு இல்லாமல், வங்கிகள் விடுமுறை இரண்டு நாட்களுக்கு மேல் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாராக்கடன் கால நிர்ணயம் 6 மாதம் என்ற முறையை நிரந்தரமாக்க வேண்டும். ஈஎஸ்ஐ மற்றும் பிஎப் சட்டத்தில் நடைமுறை சிக்கல்களை கலைந்து எளிமையாக்க வேண்டும். ஈரோடு மாநகரில் மாநகராட்சி, மின்வாரியத்தின் திட்டப்பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைக்க வேண்டும்.

ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து பஸ் ஸ்டாண்ட், வீரப்பன் சத்திரம் வரை புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும். சரக்கு மற்றும் போக்குவரத்து வாகன காப்பீட்டு பிரிமியத்தை குறைக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பெருந்துறை சிப்காட், உணவு பூங்காவில் தொழில் நிறுவனங்கள் அமைவதில் ஏற்படும் தடைகள் மற்றும் இடையூறுகளை கலைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தொழில் முனைவோர் குறைகளை தீர்க்க மாவட்ட கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கோவிட்-19க்கு பிறகு ஏற்பட்டுள்ள மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக சங்கத்தின் முன்னாள் பொருளாளர் ராம்பிரகாஷ், சங்கத்தின் ஓராண்டு வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார். 

இதைத்தொடர்ந்து ஈடிசியாவின் புதிய நிர்வாக குழுவின், தலைவராக சக்தி புருட்ஸ் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பி.திருமூர்த்தி, துணைத்தலைவராக வி.டி.ஸ்ரீதர், செயலாளராக மில்கா வொண்டர் கேக்கின் நிர்வாக இயக்குனர் ஆர்.ராம்பிரகாஷ், பொருளாளராக எஸ்.பழனிவேல், இணை செயலாளராக ஏ.சரவணபாபு ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர். 

புதிய நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், சங்கத்தின் உறுப்பினர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். சங்கத்தின் புதிய தலைவர் திருமூர்த்தி, மாவட்டத்தில் உள்ள ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும், சங்க பிரச்னைகளை தீர்க்கப்படும் என உறுதி அளித்தார். விழா முடிவில், மில்கா வொண்டர் கேக்கின் நிர்வாக இயக்குனரும் சங்க செயலாளர் ராம்பிரகாஷ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

வாக்குப் பதிவையொட்டி சேலம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு

சேலம் மாவட்டத்தில் தயாா் நிலையில் 3,260 வாக்குச் சாவடிகள்

வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT