தமிழ்நாடு

திருச்செந்தூர் மாசித்திருவிழா 8-ஆம் நாள்: வெள்ளிச் சப்பரத்தில் சுவாமி - அம்மன் வீதியுலா

24th Feb 2021 08:46 AM

ADVERTISEMENT

 

திருச்செந்தூர் மாசித்திருவிழா எட்டாம் நாள் காலையில் சுவாமி சண்முகப்பெருமான், வள்ளி, தேவசேனா அம்மனுடன் வெள்ளைச் சாத்தி வெள்ளிச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கடந்த பிப். 17-ம் தேதி மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

திருவிழாவினை முன்னிட்டு நாள்தோறும், காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ADVERTISEMENT

மாசித்திருவிழாவின் எட்டாம் நாளான இன்று காலை சுவாமி சண்முகப்பெருமான், வள்ளி, தேவசேனா அம்மனுடன் வெள்ளைச் சாத்தி வெள்ளிச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
 

Tags : thiruchendur Temple Murugan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT