தமிழ்நாடு

சாத்தான் குளம் அருகே ஜாமீனில் வெளியே வந்தவர் வெட்டிக்கொலை

24th Feb 2021 12:12 PM

ADVERTISEMENT

 

சத்தான் குளம் அருகே பெண்ணை வெட்டிய வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

சாத்தான்குளம் அருகே உள்ள பனைக்குளத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை மகன் யோவான்(35). இவர் சமீபத்தில் பனைக்குளத்தை சேர்ந்த பெண்ணை பின்னால் சென்று வெட்டியது தொடர்பாக கைதாகி ஜாமீனில் சமீபத்தில் வெளியே வந்துள்ளார். 

இந்நிலையில் இன்று ஊரின் வடபகுதியைக் காட்டுப்பகுதியில் கழுத்து துண்டாக வெட்டப்பட்ட நிலையிலும் வலதுகை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார். தகவலறிந்து சாத்தான்குளம் காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

இவர் எதற்காகக் கொலை செய்யப்பட்டார் எனத் தெரியவில்லை இவர் பெண்ணை வெட்டிய வழக்கு தொடர்பாக  அந்த பெண்ணிடம் வழக்கை வாபஸ் லாங்குமாறு யோவான் அவரை மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக கொலை நடந்ததா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT