தமிழ்நாடு

வெள்ளக்கோவில் அருகே 28 ஆடுகளைக் கடித்துக் கொன்ற தெரு நாய்கள்

24th Feb 2021 12:06 PM

ADVERTISEMENT

 

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே புதன்கிழமை தெருநாய்கள் 28 ஆடுகளைக் கடித்துக் கொன்றன.

கரூர் சாலையிலுள்ள ராமலிங்கபுரம், எஸ்.பி.கே தோட்டத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் (58). விவசாயி. இவர் செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் வழக்கம்போல் பகல் நேரத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று விட்டு, இரவில் தோட்டத்திலுள்ள பட்டியில் அடைத்து வைத்திருந்தார்.

பின்னர் காலையில் பார்த்த போது சில தெரு நாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளைக் கடித்துக் குதறிக் கொண்டிருந்தன. அவைகளைத் துரத்தி விட்டுப்பார்த்த போது நாய்கள் கடித்ததில் 18 ஆடுகள், 10 குட்டிகள் இறந்து கிடந்தன. காயத்துடன் உயிருக்குப் போராடிய 5 ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.

ADVERTISEMENT

ரத்தத்தைக் குடித்துப் பழக்கப்பட்ட தெரு நாய்கள் ஆடுகளைக் கடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன. வறட்சியான வெள்ளக்கோவில் பகுதியில் வருமானத்துக்காக செம்மறி ஆடுகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. பல ஆண்டுகள் வருமானம் தரும் ஆடுகள் ஒருசேரப் பலியாவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, கடன் தொல்லை ஏற்படுகிறது.

தங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT