தமிழ்நாடு

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை 

24th Feb 2021 10:30 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில், குடியரசுத்தலைவர் ஆட்சியைக் கொண்டு வர துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரை செய்திருப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி முடிவு செய்யும்.

காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ராஜிநாமாவைத் தொடர்ந்து, புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த 22-ஆம் தேதி நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்தது. இதையடுத்து, தனது ராஜிநாமா கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் நாராயணசாமி அளித்தார்.

ADVERTISEMENT

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்த நிலையில் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT