தமிழ்நாடு

பாம்பாறு அணையிலிருந்து விவசாய பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு

24th Feb 2021 05:38 PM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை தற்போது முழு கொள்ளவை எட்டி நிரம்பி உள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவுப்படி நீர்த்தேக்கத்திலிருந்து பாசன வசதிக்காகப் புதன்கிழமை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி அவர்கள்  திறந்து வைத்தார்.

பாம்பாறு அணை நீர் திறப்பால்  மூன்றம்பட்டி, கொண்டம்பட்டி, பாவக்கல், அத்திப்பாடி, நாய்க்கனூர், நடுப்பட்டி போன்ற ஊராட்சிகளுக்கு உள்பட்ட சுமார் 4000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்வர் பாஷா,மகேஷ்குமார்,வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன்,மிட்டப்பள்ளி கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தேவேந்திரன், உதவி செயற் பொறியாளர் கார்த்திக், கொண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சத்தியவாணி ராஜா மற்றும் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT