தமிழ்நாடு

நெல்லை: ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

24th Feb 2021 04:13 PM

ADVERTISEMENT

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்த நாளையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அதிமுகவினர் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு திருநெல்வேலி மாவட்டச் செயலர் தச்சை என்.கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்புச் செயலர் வீ.கருப்பசாமி பாண்டியன், முன்னாள் எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், வசந்தி முருகேசன், மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் கல்லூர் இ.வேலாயும், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலர் ஜெகநாதன் என்ற கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

ADVERTISEMENT

ஜெயலிலதாவின் பிறந்த நாளை முன்னிட்டு பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவர்களுக்கு மாவட்டச் செயலர் தச்சை என்.கணேசராஜா காலை உணவு வழங்கினார். 

இதேபோல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் தலா 1 கிராம் தங்கம் மோதிரம், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலர் ஜெரால்டு ஏற்பாட்டில் அணிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT